சினிமா
நிகில் முருகன்

போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் நிகில் முருகன்

Published On 2020-11-07 16:31 IST   |   Update On 2020-11-07 16:31:00 IST
சினிமாவில் முன்னணி பிஆர்ஓ- வாக இருக்கும் நிகில் முருகன், பவுடர் படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்க இருக்கிறார்.
சினிமாவில் முன்னணி பிஆர்ஓ- வாக இருப்பவர் நிகில் முருகன். இவர் 300 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி இருக்கிறார். தற்போது பவுடர் படம் மூலம் நடிகராக களமிறங்கி இருக்கிறார். 

பவுடர் படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கி வருகிறார். இவர் 'தாதா 87' படத்தில் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்துள்ளார்.


தற்போது உருவாகி வரும் பவுடர் படத்தில் வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்க வலிமை மிக்க போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ நிகில் முருகன். 

இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, நிகில் முருகனின் கதாபாத்திரத்தின் பெயர் ராகவன். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமல்ஹாசன் சூட்டிக்கொண்டதால் வலிமை பெற்ற அந்தப் பெயரை 'பவுடர்' படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன். ராகவன் கேரக்டரில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பையர் ஆனதால் அதே பெயரை இந்தக் கதாபாத்திரத்துக்குக் கொடுத்துள்ளேன். என்றார்.

Similar News