சினிமா
பூனம் பாண்டே - மிலிந்த் சோமன்

பூனம் பாண்டேவை தொடர்ந்து நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்

Published On 2020-11-07 15:46 IST   |   Update On 2020-11-07 15:46:00 IST
தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமன் நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருப்பவர் மிலிந்த் சோமன். இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த நவம்பர் 4-ம் தேதி தனது 55-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவது போன்ற தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். 

இந்தப் புகைப்படம் குறித்து கோவா சுரக்‌ஷ் மன்ச் என்கிற அரசியல் கட்சி வாஸ்கோ காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது. புகாரில் ஆபாசமான இந்தப் புகைப்படத்தால் கோவாவின் கலாச்சாரத்தை களங்கப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக கோவாவில் தடை செய்யப்பட்ட பகுதியில் நடிகை பூனம் பாண்டே ஆபாசமாக புகைப்படம் எடுத்ததற்காக அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் மிலிந்த் சோமனை மட்டும் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News