சினிமா
கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக புகார்

Published On 2020-11-04 15:31 IST   |   Update On 2020-11-04 15:31:00 IST
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரி, சனம் ஷெட்டி, சம்யுக்தா, பாலாஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம் சேகர், ரியோ, அனிதா சம்பத், ஷிவானி, ஆஜீத், ரம்யா பாண்டியன், நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, வேல் முருகன், கேபிரில்லா உள்ளிட்ட 16 பேருடன் தொடங்கப்பட்டது.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் இணைந்துள்ளனர். இதில் நடிகை ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.



இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி, தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், தமிழர்கள் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சி இருப்பதாகவும், தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News