சினிமா
விஜய் ராஸ்

நடிகைக்கு பாலியல் தொந்தரவு - காக்கி சட்டை பட வில்லன் கைது

Published On 2020-11-03 21:25 IST   |   Update On 2020-11-03 21:25:00 IST
சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்தில் வில்லனாக நடித்த விஜய் ராஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் விஜய் ராஸ். 57 வயதான இவர் பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். க்யா தில்லி க்யா லாகூர் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

நடிகர் விஜய் ராஸ், தற்போது வித்யா பாலன் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பிலேயே ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.



படப்பிடிப்பு தளத்தில் சக நடிகைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் மஹாராஷ்டிரா போலீசார் விஜய் ராஸை கைது செய்தனர். பின்னர், விஜய் ராஸ் ராம்நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Similar News