சினிமா
இரண்டாம் குத்து படக்குழுவினர்

இரண்டாம் குத்து வழக்கு - நீதிமன்றம் திடீர் உத்தரவு

Published On 2020-11-03 12:14 GMT   |   Update On 2020-11-03 12:14 GMT
இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.
இரண்டாம் குத்து திரைப்படத்தை திரையிட தடை விதிக்கவும், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக் கோரிய வழக்கில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறும்போது முன்பு வந்த திரைப்படங்களான பாசமலர் போன்ற படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. ஆனால் தற்போது தகாத வார்த்தைகள் இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை படத்தில் கொண்டுவந்து படத்திற்கான விளம்பரத்தை தேடுகின்றனர்.



இதைவிட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்கள் ஆபாசமான பேச்சுகள், வசனங்கள் தகாத உறவுகள் ஆகியவற்றைப் பற்றியே கூறுகிறது. இதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


மனுதாரர் தரப்பில் இரண்டு என்று இணையதளத்தில் தேடுதல் செய்தால் இந்தப்படத்தின் டீசர் வருகிறது. இதனால் மாணவ மாணவிகளின் பார்ப்பதன் மூலம் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழுவை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையை எதிர் மனுதாரராக இணைத்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 20ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News