சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்தி இருக்கிறார்கள்.
ரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்
பதிவு: அக்டோபர் 28, 2020 21:21
மனைவியுடன் பாக்யராஜ் கண்ணன்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ரெமோ. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கார்த்தியை வைத்து ‘சுல்தான்’ படத்தை இயக்கி வருகிறார் பாக்யராஜ் கண்ணன்.
அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் திருமணம் செய்துகொண்டுள்ளார். சுல்தான் படப்பிடிப்பின்போதே இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் அட்லீ ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
Related Tags :