பேய்மாமா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் யோகிபாபு தான் சம்பளமே வாங்காமல் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
சம்பளமே வாங்காமல் நடித்த யோகிபாபு - ஏன் தெரியுமா?
பதிவு: அக்டோபர் 20, 2020 12:28
யோகிபாபு
விக்னேஷ் ஏலப்பன் தயாரிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய்மாமா படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் யோகிபாபு பேசியதாவது: “ஷக்தி சிதம்பரம் என்னை கதாநாயகனாக நிறுத்தி உள்ளார். மிகவும் பயமாக இருக்கிறது. இந்தப்படம் முதலில் வடிவேல் நடிப்பதற்காக பண்ணியது என்று ஷக்தி சொன்னார். உடனே நான் “வடிவேல் ஜீனியஸ். அதனால் எனக்கு எப்படி செட்டாகும்” என்று கேட்டேன்.
இந்தப்படம் வெற்றி அடைய எல்லோருடைய ஆதரவும், அன்பும் வேண்டும். நான் சம்பள விசயத்தில் பெரிய கறார் கிடையாது. சமீபத்தில் கூட ஒரு பெண் உதவி இயக்குனர், ஒரு கதை பண்ணிருக்கேன் நீங்க பண்ணிக் கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தா தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு.
நான் உடனே “இலவசமாக நடித்து தர்றேம்மா உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்” என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். படத்தின் டிரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான்.” இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :