சினிமா
சூர்யா- சௌந்தரராஜா

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும்- சௌந்தரராஜா விருப்பம்

Published On 2020-09-15 10:20 IST   |   Update On 2020-09-15 10:20:00 IST
நடிகர் சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும் என்று சௌந்தரராஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்திருக்கிறார்.

இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் சூர்யா. அவர்கள் குடும்பமே கல்விக்காக நிறைய விஷயங்களை செய்து வருகிறார்கள். சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கையை நான் ஆதரிக்கிறேன். பலரும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து ஆதரிக்க வேண்டும்.

நடிகர் சூர்யா அண்ணா அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பாக கல்வி துறையில் அவர் வந்தால் சிறப்பாக இருக்கும். என்னுடைய விருப்பம் மட்டுமில்லை, பல ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Similar News