சினிமா
இந்தி தெரியாது போடா டி-சர்ட் அணிந்த மேலும் ஒரு நடிகை
நடிகர்கள், நடிகைகள் பலரும் இந்தி தெரியாது போடா டி-சர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் மேலும் ஒரு நடிகை அணிந்து புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ’இந்தி தெரியாது போடா ’மற்றும் ’I am a தமிழ் பேசும் இந்தியன்' ஆகிய வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்டுகளை அணிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதுகுறித்து ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில் தற்போது தமிழ் நடிகைகளில் ஒருவரான சாந்தினி தமிழரசன் ’இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சாந்தனு நடித்த ‘சித்து+2’ என்ற படத்தில் அறிமுகமான சாந்தினி தமிழரசன், அதன்பின் ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘பில்லா பாண்டி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.