பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், தான் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் வீடியோ சாட் செய்தனர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா, அக்ஷய் குமாரிடம் கேட்டார்.
அதற்கு அக்ஷய் குமார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறியதாவது, நான் தினமும் மாட்டுக் கோமியம் குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார். ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக அவர் கூறினார்.