சினிமா
திவ்யா சத்யராஜ்

ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் அதை எதிர்க்கிறேன் - திவ்யா சத்யராஜ்

Published On 2020-09-10 17:33 IST   |   Update On 2020-09-10 17:33:00 IST
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் அதை எதிர்க்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்காக வட இந்தியா பாணியில் ரத யாத்திரை நடத்துவதற்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் ரத யாத்திரை அனுமதிக்கக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் "கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் இருக்கிறது மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க "மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News