தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், அடுத்ததாக நடிக்கும் படத்தை பிரபல பெண் இயக்குனர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘தல 61’ அப்டேட் - பிரபல பெண் இயக்குனருடன் கூட்டணி சேரும் அஜித்?
பதிவு: செப்டம்பர் 09, 2020 14:07
அஜித்
நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ந் தேதி ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. விஜய்யின் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் தான் அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் இதுவரை இரண்டு முறை பெண் இயக்குனர்கள் இயக்கிய படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் உயிரோடு உயிராக படத்தை சுஷ்மா அஹுஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை கவுரி ஷிண்டேவும் இயக்கி இருந்தனர். அஜித்தின் 61வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :