சிவகார்த்திகேயனின் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயன் படம்?
பதிவு: செப்டம்பர் 09, 2020 11:45
சிவகார்த்திகேயன்
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகின. அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மேலும் சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்சன்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.
Related Tags :