சினிமா
இருட்டு அறையில் முரட்டு குத்து முதல் பாகம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகத்திற்கு என்ன தலைப்பு தெரியுமா?

Published On 2020-09-08 21:16 IST   |   Update On 2020-09-08 21:16:00 IST
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் 2ம் பாகத்திற்கு என்ன தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் 2018ம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம் என்று கூறப்பட்டது. இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்து இருந்தார். 



இந்நிலையில், இப்படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 

Similar News