சினிமா
சாரா அலிகான்

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.... திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்

Published On 2020-09-06 14:17 IST   |   Update On 2020-09-06 14:17:00 IST
தனுஷ் பட நடிகை ஒருவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்- நடிகை அம்ரிதா சிங் தம்பதியின் மகளான சாரா அலிகான், பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகை அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சாரா அலிகான் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் சாரா அலிகான் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக்கொண்டு புத்தகம் படித்தபடி அந்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் சாரா அலிகான். 



பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாரா அலிகான், அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கும் அத்ரங்கி ரே படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அக்‌ஷய்குமாரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News