சினிமா
சூர்யா

திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா.... வைரலாகும் சூர்யாவின் போஸ்டர்

Published On 2020-09-04 19:48 IST   |   Update On 2020-09-04 19:48:00 IST
திரையுலகை ஆண்டது போதும்., தமிழகத்தை ஆள வா என்று சூர்யாவின் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் வழக்கம் போலவே மதுரையின் சுவர்களை நிரப்பி வருகின்றன. விஜய்யின் திருமண நாளுக்கு போஸ்டர், மாஸ்டர் எப்போது வரும் என போஸ்டர், மாஸ்டர் ஓடிடியில் வரக்கூடாது என போஸ்டர், என தினமும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல் அஜித் ரசிகர்களும், வலிமை திரைப்படம் தியேட்டரில் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் எந்த தளத்திலும் காண மாட்டோம் என உறுதிமொழியை ஏற்று அதை போஸ்டராக அடித்து ஒட்டினர். இந்நிலையில் சூர்யா ரசிகர்களும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.



செப்டம்பர் 5 ஆம் தேதி சூர்யா திரையுலகிற்கு வந்து 23 ஆண்டுகள் ஆகும் நிலையில், சேகுவாரா போல சூர்யாவை சித்தரித்து 'திரையுலகை ஆண்டது போதும்... தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே...!' என்று உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டதுடன், தமிழக சட்டமன்றத்தின் படத்தையும் அதில் இடம்பெறச் செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Similar News