சினிமா
அஜித், ரஜினி, விஜய்

ரஜினி, விஜய், அஜித் படங்களில் பணியாற்றியவர் இயக்கும் புதிய படம்

Published On 2020-08-07 17:31 IST   |   Update On 2020-08-07 17:31:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் நடித்த படங்களில் பணியாற்றியவர் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
பல தமிழ் படங்களுக்கு பைனான்ஸ் செய்து வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார்.

பாகுபலி, கபாலி, கத்தி, விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பிஎஃப் எக்ஸ் (VFX) துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயகுனராக அறிமுகம் ஆகிறார். தொடுப்பி மற்றும் கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனாக நடித்த தணிகை இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.



 மருத்துவமனையில் நடைபெறும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களினால் ஒரு சாமானியன் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகிறான் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கிரைம் கலந்த ஆக்க்ஷன் திரில்லர் ஆகவும் அனைத்து தரப்பு மக்களும் தாங்கள் சந்தித்த விஷயங்களை வெளிக்கொணரும் படியாகவும் இந்த படம் உருவாகிறது.

 கதாநாயகி மற்றும்  மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் துவக்க விழா ராஜிவ் காந்தி கல்லூரி சேர்மன் Dr. மக்கள் ஜி இராஜன் பங்கேற்க அரசாங்க விதிமுறை படி எளிதாக நடைபெற்றது.

Similar News