சினிமா
விஜய் தேவரகொண்டா

17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா

Published On 2020-06-05 15:00 GMT   |   Update On 2020-06-05 15:03 GMT
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா 17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார்.
உலகம் முழுவதும் 'கொரோனா' நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இதற்கு தீர்வு காண எண்ணினார். அதன் காரணமாக தனது இலாப நோக்கமில்லாத அமைப்பான தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் ஒரு தனித்துவ முயற்சியை மேற்கொண்டார்.

விஜய் தேவர்கொண்டாவின் இந்த அறக்கட்டளை இதுவரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது.  மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக்கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு  சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது. எனவே அறக்கட்டளை எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது.



இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News