ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படத்தின் கதை உரிமையை பிரபல இயக்குனர் தேடி வருகிறார்.
ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் சிம்பு, கமல்ஹாசன் நடித்த வேடத்தில் துல்கர் சல்மான் அல்லது விஜய் தேவரகொண்டா, ஸ்ரீப்ரியா நடித்த வேடத்தில் சுருதிஹாசன் ஆகியோர் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
“இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் பொருந்துகிற இந்த கதையை மீண்டும் படமாக்குவதை பெருமையாக கருதுகிறேன். ‘அவள் அப்படித்தான்’ கதையை படமாக்கும் உரிமை யாரிடம் இருக்கிறது? என்று தேடி வருகிறேன். அவரிடம் இருந்து உரிமையை வாங்கி விட்டால், அடுத்த கட்ட வேலையை பார்க்கலாம்” என்கிறார், டைரக்டர் பத்ரி வெங்கடேஷ்.