சினிமா
கவுதம் மேனன், சாந்தனு

சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்

Published On 2020-06-05 10:12 IST   |   Update On 2020-06-05 10:12:00 IST
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன், நடிகர் சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துள்ளார்.
காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் 'கார்த்திக் டயல் செய்த எண்' எனும் குறும்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாகி உள்ளது. இதில் சாந்தனு, மேகா ஆகாஷ், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு கார்த்திக் இசையமைத்துள்ளார். 

இப்பாடலை கவுதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்பாடலின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் முழுப்பாடலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News