தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமன்னா
Advertising
Advertising
தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. அடுத்ததாக தமிழில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ள தமன்னா, தெலுங்கில் சீட்டிமார் படத்தில் கபடி பயிற்சியாளராக நடிக்கிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கால் தமன்னா, வீட்டிலேயே முடங்கி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தினந்தோறும் போட்டோ, வீடியோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் தமன்னா மீசையுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொபைல் ஆப் மூலம் வைத்த மீசை என்றாலும், பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.