சினிமா
ஜீத்து ஜோசப், திரிஷா, மோகன்லால்

திரிஷா படம் கைவிடப்பட்டதா? - ஜீத்து ஜோசப் விளக்கம்

Published On 2020-05-20 02:10 GMT   |   Update On 2020-05-20 02:10 GMT
மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக திரிஷா நடித்து வந்த படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவிவந்த நிலையில், இயக்குனர் ஜீத்து ஜோசப் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படத்துக்கு, ‘ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், மோகன்லால் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். 50 சதவீத படம் வளர்ந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மீதமுள்ள காட்சிகளை லண்டனில் படமாக்கப்பட வேண்டியிருப்பதால், இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஜீத்து ஜோசப் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக செய்திகள் பரவின.



இந்நிலையில் அதுகுறித்து இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:  ராம் படத்தை நான் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இது தவறான செய்தி. இதன் மீதி படப்பிடிப்பு லண்டனிலும், உஸ்பெகிஸ்தானிலும் நடத்த வேண்டி உள்ளது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த செல்லும் அளவுக்கு நிலைமை சீரானதும் ராம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும்” என கூறியுள்ளார்.
Tags:    

Similar News