சினிமா
ரகுல் பிரீத் சிங்

எப்படி பிரித்து கொடுக்க போகிறேன்? - குழப்பத்தில் ரகுல் பிரீத் சிங்

Published On 2020-05-16 16:46 IST   |   Update On 2020-05-16 16:46:00 IST
எப்படி பிரித்து கொடுக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் அளித்த பேட்டி வருமாறு:-

வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் முக்கியம். சந்தோஷம் இல்லாமல் பணம், புகழ் இருந்தும் பயன் இல்லை. நேரத்தை வீணாக்குவது பிடிக்காது. உண்மையாக இருப்பதுபோல் போலியாக நடிப்பவர்களையும் பிடிக்காது. எனது எண்ணங்களில் ஆன்மீக தாக்கம் இருக்கும். வெற்றி, தோல்வி இரண்டும் என்னை பாதிக்காது. நீங்கள் உங்களை மாதிரி இருங்கள். மற்றவர்களுக்காக தன்னை மாற்ற கூடாது.

முதல் பார்வையில் காதல் வரும் என்பதில் நம்பிக்கை இல்லை. அப்படி வந்தால் அது கவர்ச்சிதான். பழகி ஒருவரை ஒருவர் புரிந்து அதன்பிறகு காதலிப்பதுதான் உண்மையானது. எனக்கு இன்னும் காதல் வரவில்லை. ஒரு உறவில் மோசம் என்பது இருக்கவே கூடாது. ஒருவேளை நான் காதலிக்கும் நபர் மோசம் செய்தால் அவரை விட்டு விடுவேன். கவர்ச்சி என்பது அழகில் இல்லை. அவர்களுக்குள் இருக்கிற தன்னம்பிக்கையில் வரும்.

உலகம் முழுவதும் சுற்ற வேண்டும். பல நாட்டு உணவுகளை ருசித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஏனெனில் நான் பெரிய சாப்பாட்டு பிரியை. கொரோனா ஊரடங்கினால் நான் நடித்த படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. அந்த படங்களுக்கு கால்ஷீட்டை எப்படி பிரித்து கொடுக்க போகிறேன்? என்று தெரியவில்லை.

இவ்வாறு கூறினார்.

Similar News