சினிமா
அமைச்சர் கடம்பூர் ராஜூ

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி எப்போது? - அமைச்சர் பதில்

Published On 2020-05-15 19:36 IST   |   Update On 2020-05-15 19:36:00 IST
சினிமா படப்பிடிப்புகளுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக 22.3.2020 முதல் தற்போது வரை லாக்டவுன் தொடர்ந்து அமுலில் உள்ளது. தற்போது தமிழக முதல்வர் சில பணிகள் செய்து கொள்ள 11.5.2020 முதல் தளர்வுகள் அறிவித்தார். அதில் சினிமா சம்பந்தப்பட்ட அறிவிப்பாக போஸ்ட் புரோடக்ஷன் எனும் திரைப்படம் படப்பிடிப்புக்கு பின்னால் உள்ள ஸ்டுடியோ பணிகளை 5 பேர் கொண்ட டெக்னீஷியனுடன் சமூக இடைவெளி விட்டு பணிபுரிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதிலிருந்து பல படங்களின் பின்னணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புகளுக்கு அனுமதி எப்போது வழங்கப்படும் என்று சினிமா உலகினர் ஏதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிப்பது பற்றி மே.17 க்கு பின் முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

Similar News