சினிமா
சிரிண்டா

சமூக வலைதளத்தில் ஆபாசமாக கமெண்ட் அடிக்கிறார்கள்.... நடிகை பரபரப்பு புகார்

Published On 2020-05-15 10:00 IST   |   Update On 2020-05-15 10:00:00 IST
சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ஆபாசமாக கமெண்ட் அடிப்பதாக இளம் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தமிழில் வெண்ணிலா வீடு படத்தில் நடித்தவர் சிரிண்டா. கேரளாவை சேர்ந்த இவர் போர் பிரண்ட்ஸ் படத்தில் அறிமுகமாகி 22 பிமேல் கோட்டயம், 101 வெட்டிங்ஸ், தட்டத்தின் மறையத்து, மங்கலீஷ், ஆடு, லோஹம், ராணி பத்மினி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மம்முட்டி, பகத் பாசில், நிவின் பாலி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்தும் நடித்து இருக்கிறார்.

சிரிண்டா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அந்த புகைப்படங்களை பார்த்து சிலர் ஆபாச கருத்துகள் பதிவிட்டனர். அவரது தோற்றம் பற்றி அவதூறான வார்த்தைகளையும் பகிர்ந்தனர். இது சிரிண்டாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 



இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியதாவது: சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமும் இல்லை. எனது சமூக வலைத்தள பக்கத்தில் சிலர் ஆபாசமான கருத்துகளை பதிவிடுகின்றனர். இதனை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

நான் எந்த மாதிரியான உடைகளை அணிய வேண்டும், என்ன கருத்துகளை பதிவிட வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்லித்தர தேவை இல்லை. எனது சமூக வலைத்தளத்தில் வந்து உங்கள் வக்கிரங்களை காட்ட வேண்டாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News