சினிமா
கணவரை வெளுத்து வாங்கிய ஷில்பா ஷெட்டி
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ஷில்பா ஷெட்டி தனது கணவரை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
தமிழில் விஜய் உடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ஷில்பா ஷெட்டி, மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்தார். பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் செய்த டிக் டாக் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், பிஸியாக வேலைபார்க்கும் ஷில்பா ஷெட்டிக்கு அவரது கணவர் ராஜ்குந்த்ரா முத்தம் கொடுக்க வர, அவரைத் தடுத்து, தான் வேலை செய்து கொண்டிருக்கும் போது முத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்.
அப்போது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், நானும் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்க மாட்டேன் என்கிறார் என்று ஷில்பா ஷெட்டியைப் பார்த்து கூறுகிறார். இதையடுத்து தனது கணவரை வெளுத்து வாங்குகிறார் ஷில்பா ஷெட்டி.
வேடிக்கையான இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.