சினிமா
சோனா

2 முறை காதல் வந்தது.... இருவரும் ஏமாற்றி விட்டார்கள் - நடிகை சோனா

Published On 2020-05-14 07:35 IST   |   Update On 2020-05-14 07:37:00 IST
நடிகை சோனா தனக்கு இரண்டு முறை காதல் வந்ததாகவும், திருமணம் வரை நெருங்கி கடைசி நிமிடத்தில் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
துணிச்சலாக பேசும் நடிகைகளில் சோனாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில், 125 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அவரிடம், “இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து சோனா கூறியதாவது: “என் வாழ்க்கையில் 2 முறை காதல் வந்தது. ஒருவருடன் 6 வருடங்கள் உயிருக்குயிராக பழகினேன்.

இன்னொருவருடன் 7 வருடங்கள் பழகினேன். அந்த 2 காதலும் தோல்வியில் முடிந்தது. 2 பேருடனும் திருமணம் வரை நெருங்கினேன். கடைசி நிமிடத்தில் ஏமாற்றி விட்டார்கள். இதனால் திருமண வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. “சீக்கிரமே திருமணம் செய்து கொள்” என்று நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள். 



எனக்கு 2 கடமைகள் இருக்கிறது. அதில் ஒன்று, என் தங்கை திருமணம். இன்னொன்று, ஒன்றுவிட்ட இன்னொரு தங்கையின் திருமணம். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்து இருக்கிறேன். தத்து எடுத்து வளர்ப்பவர்கள் மீது அந்த குழந்தைகள் பாசமாக இருப்பதை பார்த்து இருக்கிறேன். 

என் சுயசரிதையை நான் எழுதி முடித்து விட்டேன். அதில், நிறைய முக்கியமான ரகசியங்கள் உள்ளன. அதை புத்தகமாக வெளியிடுவதற்கு சரியான பதிப்பாளரை தேடி வருகிறேன். ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், வெளியில் எங்கும் போக முடிவதில்லை. நான்கு சுவர்களை பார்த்தபடி, வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன். இப்போதைக்கு அந்த 4 சுவர்கள்தான் என் நண்பர்கள்”.

இவ்வாறு சோனா கூறினார்.

Similar News