சினிமா
நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி மீது 5 போலீஸ் நிலையங்களில் புகார்

Published On 2020-05-13 15:50 IST   |   Update On 2020-05-13 15:50:00 IST
இந்து மதம் குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது ஆரணி உள்பட 5 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆரணியை சேர்ந்த பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய கோபி தலைமையில் பா.ஜ.க.வினர் ஆரணி போலீஸ் நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார் அளித்தனர்.

அதில் டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி இந்துக் கோவில்களில் நடக்கும் இந்து ஆகம விதிகளை கொச்சைப்படுத்தி காழ்ப்புணர்ச்சியுடன் பேசி உள்ளார். இதற்கு முன்பு சபரிமலை விவகாரத்தில் பெண்களை அனுமதித்தல் சம்பந்தமாக இந்து மதத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அவர் பேசியதால் எனக்கு மிகுந்த மன உளைச்சலும் மன வேதனையும் அடைந்தேன். பெரும்பான்மை மக்களின் வழிபாட்டில் ஆகம விதிகளை குறித்து பேசிய விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதேபோல் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம், சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, வாலாஜா போலீஸ் நிலையங்களில் இந்து அமைப்பினர் நடிகர் விஜய் சேதுபதி மீது புகார் அளித்துள்ளனர்.

Similar News