சினிமா
கனிகா கபூர்

பாடகி கனிகாவின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுப்பு

Published On 2020-05-13 08:52 GMT   |   Update On 2020-05-13 08:52 GMT
கொரோனாவில் இருந்து மீண்ட பாடகி கனிகா கபூரின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
லண்டனில் இருந்து திரும்பி வந்த பாடகி கனிகா கபூருக்கு , கொரோனா தொற்று இருந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய அவர், கொரோனா சிகிச்சைக்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்யவும் தயாராக இருப்பதாக அறிவித்தார். 

பிளாஸ்மா தானம் செய்பவருக்கு ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு 12.5 புள்ளிக்கு அதிகமாகவும், எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். நீரிழிவு, இருதய நோய், மலேரியா உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கக் கூடாது. இந்நிலையில், கனிகாவின் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரது பிளாஸ்மா மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்த ஏற்புடையதாக இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.



கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் டாக்டர் துலீகா சந்திரா கூறுகையில், ‘’கனிகாவின் குடும்ப மருத்துவ அறிக்கைையின்படி அவரது பிளாஸ்மா, தானமாக பெற ஏற்புடையதல்ல. மருத்துவ தர்மத்தின்படி, யாருடைய குடும்ப மருத்துவ அறிக்கையும் பகிர்ந்து கொள்ளப்படாது. அவரது பிளாஸ்மா சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது என்றாலும், ஆய்வுக்கு உபயோகப்படும். ’ என்றார்.
Tags:    

Similar News