சினிமா
புலம்பெயர்ந்த தொழிலார்களை வழியனுப்பி வைத்த சோனு சூட்

படத்தில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ - புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்த நடிகர்

Published On 2020-05-12 09:00 GMT   |   Update On 2020-05-12 09:00 GMT
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பிரபல நடிகர் தனது சொந்த செலவில் 10 பஸ்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு நடிகர்-நடிகைகள் உதவிகள் வழங்கி வருகிறார்கள். தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து உதவியுள்ளார். 

இதற்காக இரண்டு மாநில அரசுகளிடமும் முறையான அனுமதி பெற்று தனது சொந்த செலவில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார். சோனு சூட்டின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.



சோனு சூட் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News