சினிமா
நடிகர் விவேக்

நடிகர் விவேக்கின் திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2020-04-29 21:36 IST   |   Update On 2020-04-29 21:36:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் விவேக், தற்போது திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் இருந்து மே 3ஆம் தேதி வரை விலகுவதாக நடிகர் விவேக் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே டுவிட்டரில் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருபவர் நடிகர் விவேக். தற்போதைய கொரோனா குறித்து ஒருசில விழிப்புணர்வு வீடியோக்களை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மே 3 வரை சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாகவும் ஒருசில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மே 3ஆம் தேதி தான் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ரசிகர்கள் பலரும் என்ன ஆனது என்று கேட்டு வருகிறார்கள்.

Similar News