சினிமா
குமார் நாராயணன்

விழிப்புணர்வு பாடல் மூலம் பத்திரமாக இருக்கச் சொல்லும் இசையமைப்பாளர் குமார் நாராயணன்

Published On 2020-04-29 20:44 IST   |   Update On 2020-04-29 20:44:00 IST
பத்திரம் என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை இசையமைப்பாளர் குமார் நாராயணன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பலரும் வீட்டுக்குள்ளே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பலர் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் வெளியில் சுற்றி வருகிறார்கள். 

கொரோனா பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் எண்ணத்தில் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் குமார் நாராயணன் விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

பத்திரம் என்று தொடங்கும் இந்த பாடல், கொரோனா பற்றியும், வெளியில் செல்லும் போது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறியிருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் குமார் நாராயணன் இதற்கு முன், இந்தியாவின் முக்கிய நாட்களான சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் காதலர் தினம் மகளிர் தினம் ஆகிய தினங்களுக்கு சிறப்பு பாடல்களையும் உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News