சினிமா
நடிகை இஷா குப்தா

ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிக்கும் இஷா குப்தா

Published On 2020-04-29 15:31 IST   |   Update On 2020-04-29 15:31:00 IST
பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா ஸ்பெயின் தொழில் அதிபரை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
நடிகைகள் பிரியங்கா சோப்ரா அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோனசையும், ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரே கோச்சேவையும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த வரிசையில் இந்தி நடிகை இஷா குப்தா வெளிநாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள தயாராகிறார். இஷா குப்தா தமிழில் பிரபு, கிஷோர் நடித்த ‘யார் இவன்’ படத்தில் நடித்து இருக்கிறார். அக்‌ஷய்குமாருடன் ‘ரஸ்டம்’ படத்தில் நடித்துள்ளார். ஹன்ஷகல்ஸ், பாட்ஷாவோ, கமாண்டோ 2, ராஸ் 3 உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வந்தார். இஷா குப்தா ஒருவருடன் ரகசிய காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதுபற்றி கருத்து சொல்லாமல் இருந்தார்.



தற்போது முதல் தடவையாக காதலர் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். காதலரின் பெயர் மானுவேல் காம்போஸ் குவல்லர். இவர் ஸ்பெயினை சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். இஷா குப்தா, மானுவேல் புகைப்படத்தின் கீழ் ‘ஐ லவ் யூ சோ மச்’ என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது. ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Similar News