சினிமா
சத்குரு, சந்தானம்

நடிகர் சந்தானத்தின் கேள்விகளுக்கு பதில் அளித்த சத்குரு

Published On 2020-04-29 07:40 GMT   |   Update On 2020-04-29 07:40 GMT
கொரோனா, தமிழ் கலாச்சாரம் உள்ளிட்டவை குறித்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சந்தானம் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழும் நடிகர் சந்தானம் கொரோனா பிரச்சினை, ஆன்மீகம், ஈஷா மஹாசிவராத்திரி போன்ற பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்த சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பு, ஈஷாவின் ஒரு சொட்டு ஆன்மீகம், மரணம் குறித்த விழிப்புணர்வு, ஈஷாவின் மஹாசிவராத்திரி சர்ச்சையாக்கப்பட்டதன் நோக்கம் என பல விஷயங்களை சத்குரு விரிவாக பேசி உள்ளார்.

கொரோனா பாதிப்பு மிகுந்த இச்சூழலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என நடிகர் சந்தானம் கேட்ட கேள்விக்கு சத்குரு அளித்த பதில்: நம் தமிழ் மண்ணில் பல ஆயிரம் தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். எந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது நம் கலாச்சாரத்துடன் சேர்ந்தே இருக்கிறது.  

இப்போது நாம் எதை சொன்னாலும் இது விஞ்ஞானப்பூர்வமாக இல்லை என சிலர் சொல்கிறார்கள். அவர்களுடைய மனதில் விஞ்ஞானப்பூர்வமானது என்றால் அது மேற்கத்திய நாட்டில் இருந்து வர வேண்டும் என நினைக்கிறார்கள். இவ்வளவு காலமாக நாம் புரிந்துகொண்ட விஷயங்கள் எல்லாம் விஞ்ஞானம் இல்லை. மருத்துவ ஆய்வகத்தில் பரிசோதனை செய்தால் தான் விஞ்ஞானம் என அவர்கள் சொல்கிறார்கள்.

நாம் பாரம்பரியமாக சாப்பிடும் உணவு முறையிலேயே பல விதமான தன்மைகள் உள்ளன. மஞ்சள், புளி, தேன், வேப்பிலை, கறிவேப்பிலை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டாலே நம் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. 


கூடுதலாக தற்போதைய சூழலில் ஏதாவது செய்யவேண்டும் என்றால்,  தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள், கொஞ்சம் மல்லி ஆகியவற்றை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் தேன் கலந்து சாப்பிடலாம். இது கொரோனாவிற்கான சிகிச்சை முறை என்று நான் சொல்லவில்லை. ஆனால், சாதாரணமாக சளி, இருமல் தொந்தரவு வந்தாலே இதை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இவ்வாறு சத்குரு பேசியுள்ளார்.

மேலும், மஞ்சள், வேப்பிலை, மலை நெல்லிக்காய், தேன், மிளகு போன்றவற்றை தினமும்  உண்பதன் மூலம் நம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும் என்று சத்குரு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News