சினிமா
ஜோதிர்மயி

திடீரென மொட்டை அடித்த நடிகை..... ரசிகர்கள் ஷாக்

Published On 2020-04-24 14:38 IST   |   Update On 2020-04-24 14:38:00 IST
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை திடீரென மொட்டை அடித்ததால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
தமிழில் தலைநகரம், இதய திருடன், நான் அவனில்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜோதிர்மயி. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004-ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து 8 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து விட்டு 2011-ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான அமல் நீரத் என்பவரை 2015-ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் அமல் நீரத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மனைவி ஜோதிர்மயியின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அதில் ஜோதிர்மயி மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.  "தமசோமா ஜோதிர்கமய" என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் பொருள், இறைவா எங்களை இருளில் இருந்து வெளிச்சத்தற்கு கொண்டு செல் என்பதாகும். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் ஜோதிர்மயிக்கு என்னாச்சு? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News