சினிமா
இயக்குனர் சீனு ராமசாமி

வைரலாகும் சீனு ராமசாமியின் சமையல் வீடியோ

Published On 2020-04-20 16:35 IST   |   Update On 2020-04-20 16:35:00 IST
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி தற்போது சமையல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாகவும், ஊரடங்கு சமயத்தில் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பது குறித்தும் பல்வேறு பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது கையால் அம்மியில் மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றை அரைத்து அவரே ரசம் வைக்கும் காட்சியின் வீடியோ அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News