சினிமா
தலையணை சவால் ஏற்ற நடிகை பாயல் ராஜ்புட்

இணையத்தில் வைரலாகும் தலையணை சவாலை ஏற்ற நடிகை

Published On 2020-04-18 17:34 IST   |   Update On 2020-04-18 18:26:00 IST
தற்போதைய சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் தலையணை சவாலை பிரபல நடிகை ஏற்று அதை செய்து இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு டி சர்ட் சவால் டிரெண்டிங் ஆகியது. இந்நிலையில் தற்போது தலையணை சவால் வந்துள்ளது.

அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாயல் ராஜ்புட், உதயநிதி ஸ்டாலின் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். 

Similar News