சினிமா
ஆலன் டாவ்யூ

கொரோனாவுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பலி

Published On 2020-04-18 12:35 IST   |   Update On 2020-04-18 12:35:00 IST
பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ கொரோனா தொற்றுநோயில் சிக்கி மரணம் அடைந்துள்ளார்.

கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. வைரசை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் தவிக்கின்றன. இந்த தொற்றுநோய்க்கு நடிகர்-நடிகைகளும் பலியாகி வருகிறார்கள்.

தற்போது பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ கொரோனா தொற்றுநோயில் சிக்கி மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 77. சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.

இவர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய ஈ.டி, தி கலர் பர்பிள், எம்பயர் ஆப் தி சன், தி எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆலன் டாவ்யூ 5 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்படத்தக்கது.

Similar News