சினிமா
சல்மான்கான்

நாட்டை ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? - ஊரடங்கை மீறுபவர்களுக்கு சல்மான்கான் கேள்வி

Published On 2020-04-17 03:57 GMT   |   Update On 2020-04-17 03:57 GMT
கொரோனா தீவிரத்தை உணராமல் ஊரடங்கை மீறுபவர்களை நாட்டை ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? என்று நடிகர் சல்மான்கான் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சிலர் ஊரடங்கை மீறுவது குறித்து இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் உருக்கமாக கூறி இருப்பதாவது: அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும்படியும் அரசு கூறியுள்ளது. நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் பிரார்த்தனையை செய்யுங்கள். 

கடவுள் நமக்குள் வசிக்கிறார் என்பதை நாம் சிறுவயதிலேயே கற்றுக் கொண்டுள்ளோம். எல்லோரும் ஒருநாள் சாகத்தான் வேண்டும். ஆனால் தற்போது நீங்கள் சாக விரும்புகிறீர்களா? உங்கள் சொந்த குடும்பத்தையும் இந்த நாட்டையும் ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? அல்லது நமக்காக உழைக்கும் போலீசார் மற்றும் மருத்துவ துறையினருக்கு உறுதுணையாக இருக்க விரும்புவீர்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



நீங்கள் உங்கள் நண்பர்களுடன் அல்லது குழுவாகவோ வெளியே செல்லவில்லை என்றால் போலீசார் உங்களை தாக்கி இருக்கமாட்டார்கள். அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீங்கள் வெளியில் செல்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அப்படி செல்லும்போது கையுறைகள் மற்றும் முக கவசங்களை பயன்படுத்துங்கள். இவ்வாறு சல்மான் கான் கூறியுள்ளார்.
Tags:    

Similar News