சினிமா
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Published On 2020-04-16 17:26 IST   |   Update On 2020-04-16 17:26:00 IST
தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கொரோனா காரணமாக நடிகைகள் வீட்டிலேயே இருப்பதால், அதிகம் சாப்பிட்டு, தூங்கி உடல் குண்டாகி விடாமல் இருக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாததால் தங்களது அழகைப் பராமரிக்கும் வேலைகளை அவர்களால் சரிவர செய்ய முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே, பேஸ் பேக்குகளைப் போட்டு அவர்கள் சமாளித்து விடுகின்றனர். ஆனால், புருவம் திருத்துதல், முடியை வெட்டிக் கொள்ளுதல் போன்றவற்றை செய்ய முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர்.

இது பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என்னுடைய தயாரிப்பாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் புருவ முடிகள் வளர்ந்து அதன் அமைப்பு தடித்து விட்டது. இதனால் நான் நடித்து வந்த படங்களில் கண்டினியூட்டி மிஸ் ஆக வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News