சினிமா
நடிகை ராஷி கன்னா

பயத்தில் இருந்து வெளியே வர கண்டிப்பாக இதை செய்யுங்கள் - ராஷி கன்னா

Published On 2020-04-16 16:30 IST   |   Update On 2020-04-16 16:30:00 IST
பயத்தில் இருந்து வெளியே வர கண்டிப்பாக இதை செய்யுங்கள் என்று பிரபல நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார்.
கொரோனாவால் சினிமா தொழில் அடியோடு முடங்கி கிடக்கிறது. நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாரும் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.



ராஷி கன்னா கூறியதாவது:-

‘இப்போதையை சூழ்நிலையில் தகவல்கள் தெரிந்து கொள்வது முக்கியம்தான். ஆனால் அளவுக்கு மீறி அங்கு இவ்வளவு பேர் இறந்து விட்டனர், நாடே ஏதோ ஆகிக்கொண்டு இருக்கிறது, உலகமே அழிந்து விடப்போகிறது என்ற விஷயங்களையெல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம்.

உங்கள் எண்ணங்களை நல்ல விஷயங்களில் திருப்புங்கள். நல்ல புத்தகங்கள் படியுங்கள். தவறாமல் யோகா, தியானம் செய்யுங்கள். இதனால் மனதுக்கு அமைதி, ஆனந்தம் கிடைக்கும். பயத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக இதைசெய்ய வேண்டும்.

இந்த நேரத்தில் அழகு மற்றும் ஆரோக்கியமாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தும், நேரம் கிடைக்காமல் ஒதுக்கி வைத்தோமோ அதையெல்லாம் செய்யுங்கள். வீட்டில் அதைத்தான் நான் செய்கிறேன்’ என்றார்.

Similar News