சினிமா
தியா படக்குழு

தியா படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி

Published On 2020-04-16 13:15 IST   |   Update On 2020-04-16 13:15:00 IST
சமீபத்தில் வெளிவந்த கன்னடப் படமான தியாவை ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காண்பித்து வருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கே.எஸ். அசோகா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் தியா. இளம் நடிகர் நடிகைகள் நடித்திருந்தால் இப்படத்திற்கு ஆரம்பத்தில் வரவேற்பில்லை, பின்னர் நாளடைவில் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்கிகளாக ஓடின. இப்படம் மணிரத்னத்தின் மௌன ராகம் படம் போல இருந்தாலும், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியான பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி ரசிகர்களிடமும் பிரபலமானது. மேலும் தியா படத்தை இதர மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறதாம். படத்தை ரீமேக் செய்ய இதுவரை 60 தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதாகத் தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா கூறியுள்ளார். 



மேலும் அவர் கூறுகையில், அனைத்து மொழிகளுக்குமான ரீமேக் உரிமையை வாங்க ஓர் இயக்குநர் முன்வந்தார். அவருடன் பேசி வருகிறோம். தெலுங்கில் ரீமேக் செய்ய அதிக அழைப்புகள் வருகின்றன. தெலுங்கு பதிப்பின் டப்பிங் உரிமையை வாங்க அமெரிக்காவிலிருந்து ஒரு கோரிக்கை வந்தது. விரைவில் ரீமேக் உரிமைகள் குறித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

Similar News