சினிமா
ஸ்ரீரெட்டி

ஏழைகளுக்காக மோடியிடம் பண உதவி கேட்ட ஸ்ரீரெட்டி

Published On 2020-04-16 05:59 GMT   |   Update On 2020-04-16 06:19 GMT
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் ஏழைகளுக்கு பண உதவி செய்யுமாறு மோடிக்கு நடிகை ஸ்ரீரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை, படுக்கைக்கு அழைப்பதாக திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படத்தில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி படுக்கையில் சீரழித்து விட்டனர் என்று இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டினார். ஆந்திராவில் தனக்கு மிரட்டல்கள் இருப்பதாக சொல்லி, சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 

தற்போது பிரதமர் நரேந்திரமோடி கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தி இருந்த 21 நாட்கள் ஊரடங்கை மே 3-ந்தேதி வரை நீட்டித்து இருப்பது குறித்து ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மே 3-ந்தேதி வரை பிரதமர் நீட்டித்துள்ளார். அதன் பிறகு கொரோனா வைரஸ் வானத்துக்கா சென்றுவிடும்? முதலில் ஏழைகளை காப்பாற்றுவது பற்றி சிந்தியுங்கள். 



அவர்களுக்கு குறைந்த அளவேனும் பண உதவி செய்யுங்கள். ஒருவேளை மே 3-க்கு பிறகு வெளியில் ஒரு நபருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அவர் மூலமாக மீண்டும் லட்சக்கணக்கான மக்களுக்கு பரவிவிடும். அதன் பிறகு மீண்டும் என்ன செய்வது?”. இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
Tags:    

Similar News