சினிமா
தமன்னா

உயிரை விட எதுவும் முக்கியமில்லை - தமன்னா

Published On 2020-03-27 11:43 IST   |   Update On 2020-03-27 11:43:00 IST
ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள தமன்னா, உயிரை விட எதுவும் முக்கியமில்லை என கூறியுள்ளார்.
ஊரடங்கில் யாரும் வெளியே போகவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து நடிகை தமன்னா கூறியிருப்பதாவது:- “‘பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது, வரும் அழிவில் இருந்து முன்கூட்டியே நம்மை பாதுகாத்து கொள்ளும் முயற்சியாகும். இதை அலட்சியமாக நினைக்க வேண்டாம். நம்மை காப்பாற்றுவதற்காகத்தான் இந்த முடிவு. நமக்கான முதல் நல்ல அடியாக இதை பார்க்க வேண்டும். நாம் உயிரோடு இருப்பதைவிட எதுவும் முக்கியம் இல்லை.



நான் குடும்பத்தோடு வீட்டில் இருக்கிறேன். நீங்களும் இதையே கடைபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருப்பது வேறு. ஆனால் சாதாரண ஏழைகள், படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலிபோட்டு அவர்கள் வெளியே வராமல், மற்றவர்களையும் ஊருக்குள் வரவிடாமல் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை பார்த்து படித்தவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.” 

இவ்வாறு தமன்னா கூறினார்.

Similar News