சினிமா
குடும்பத்தினருடன் வீட்டில் யாகம் நடத்திய ரோஜா

கொரோனா பிடியில் இருந்து மக்களை காக்க சிறப்பு யாகம் நடத்திய நடிகை ரோஜா

Published On 2020-03-26 12:41 IST   |   Update On 2020-03-26 12:41:00 IST
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பிடியிலிருந்து மக்களை காக்க நடிகை ரோஜா தனது வீட்டில் சிறப்பு யாகம் ஒன்றை நடத்தி உள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா தனது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து தனது வீட்டில் பண்டிதர்கள் மூலம் ருத்ராபிஷாகம் என்ற யாகத்தினை நடத்தினர். கொரோனாவின் பிடியில் இருந்து கடவுள் பொதுமக்களை காத்திட வேண்டி இந்த யாகத்தை தனது வீட்டில் நடத்தியதாக ரோஜா தெரிவித்தார்.

Similar News