சினிமா
கணவருடன் நித்யா ராம்

கொரோனா பீதி - முகக்கவசம் அணிந்து கணவருக்கு முத்தமிட்ட நடிகை

Published On 2020-03-24 09:14 IST   |   Update On 2020-03-24 09:14:00 IST
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சின்னத்திரை நடிகை ஒருவர் முகக்கவசம் அணிந்து கணவருக்கு முத்தமிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநில மக்களிடையே கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டு உள்ளது. 

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரசை தடுக்கும் வகையில் கன்னட சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் நடிகர், நடிகைகள் வீடுகளில் நேரத்தை போக்கி வருகின்றனர். 



இந்த நிலையில் கன்னடத்தில் ஒளிபரப்பான நந்தினி என்ற சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமான நடிகை நித்யா ராம், தனது கணவர் கவுதமிற்கு முகக்கவசம் அணிந்து கொண்டு முத்தமிட்டார். இந்த புகைப்படத்தை நடிகை நித்யா ராம் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

மேலும் அந்த படத்திற்கு பாதுகாப்புடன் காதல் என்று குறிப்பிட்டு, கொரோனா தாக்கம், பாதுகாப்பாக இருங்கள், ஒரு போதும் காதலை கைவிடாதீர்கள் என்றும் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படத்திற்கு ெநட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News