சினிமா
பிரபாஸ்

கொரோனா பீதியால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்

Published On 2020-03-23 08:35 IST   |   Update On 2020-03-23 08:35:00 IST
படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்த நடிகர் பிரபாஸ், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
‘பிரபாஸ் 20’ படத்தின் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்குச் சென்று வந்தது படக்குழு. ராதா கிருஷ்ணா இயக்கி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பிவிட்டு, பிரபாஸ் யாரையும் சந்திக்கவில்லை. 



தற்போது இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிரபாஸ் கூறுகையில், “வெளிநாட்டுப் படப்பிடிப்பைப் பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில், கோவிட்-19 பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News