சினிமா
ஓல்கா குரிலென்கோ

ஜேம்ஸ்பாண்ட் ஹீரோயினையும் விட்டுவைக்காத கொரோனா

Published On 2020-03-17 11:38 IST   |   Update On 2020-03-17 11:38:00 IST
ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோ, தனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் சிலரும் கொரோனா  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வகையில், ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இவர், குவாண்டம் ஆப் சோலஸ், ஒபிலிவியான், மொமன்டம், த ரூம் உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 



தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரே தெரிவித்துள்ளார். ‘எனக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறேன். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வாக இருப்பதுதான் இதன் முதல் அறிகுறிகள். உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதை சீரியசாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று ஓல்கா குரிலென்கோ தெரிவித்துள்ளார்.

Similar News