சினிமா
ஜாக்கி சான்

எனக்கு கொரோனா பாதிப்பா? - ஜாக்கி சான் விளக்கம்

Published On 2020-02-29 16:45 IST   |   Update On 2020-02-29 16:38:00 IST
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஜாக்கி சானுக்கு இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியின் ஓய்வு பெறும் விழாவில் நடிகர் ஜாக்கிசான் உள்பட 60 பேர் கலந்து கொண்டதாகவும் அந்த விழாவில் பங்குபெற்ற 49 வயதான ஒரு போலீஸ் அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அப்போது ஜாக்கிசானுக்கு கொரோனா பரிசோதனை நடந்ததாகவும் செய்தி பரவியது.

இதனால் ஜாக்கி சான் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியை ஜாக்கி சான் வெளியிட்டிருக்கிறார்.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் ஜாக்கிசான் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-



“என்னைப் பற்றி கவலைப்பட்ட அனைவருக்கும் நன்றி. நான் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். தயவு செய்து கவலைப் படாதீர்கள். என்னை எங்கும் அடைத்து வைக்கவில்லை.

மற்ற எல்லோரும் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும். எனக்கு உலகம் முழுவதிலிருந்தும் பலவிதமான பரிசுப் பொருட்களை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அதில் நிறைய மாஸ்குகளும் இருந்தது மகிழ்ச்சியான செய்தி. அவற்றையெல்லாம் என் நிறுவனத்திடம் சொல்லி தேவையானவர்களுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன்”.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Similar News