சினிமா
வசுந்தரா

சின்ன பட்ஜெட் படங்களுக்கு கமர்சியல் வெற்றி கிடைப்பது இல்லை - வசுந்தரா

Published On 2020-01-30 16:51 IST   |   Update On 2020-01-30 16:51:00 IST
சின்ன பட்ஜெட் படங்களுக்கு கமர்சியல் வெற்றி கிடைப்பது இல்லை என்று நடிகை வசுந்தரா, ஞானச்செருக்கு பட விழாவில் பேசியுள்ளார்.
பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ‘விரைவில் வெளியாக உள்ளது. 

இந்தநிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வ.கௌதமன், பன்னீர்செல்வம், சுப்பிரமணிய சிவா, அஜயன்பாலா, நடிகைகள் மதுமிதா, வசுந்தரா, கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



நடிகை வசுந்தரா பேசும்போது, “இந்த படத்தை பார்க்கும் பாக்கியம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்தை எடுப்பதற்கு இயக்குனர் தரணி ராஜேந்திரன் எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை கேள்விப்பட்டேன். எந்த ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுக்கும்போதும் ஏதோ ஒரு வகையில் தடங்கல்கள் வந்து கொண்டேதான் இருக்கும். 

இதுபோன்ற படங்களை வெறும் விருது படமாகவே நாம் பார்க்கிறோமே தவிர, அதற்கான கமர்சியல் வெற்றி என்பது கிடைப்பது இல்லை. வீர சந்தானம் போன்ற ஒரு மகா கலைஞனை பெருமைப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தின் நிகழ்வில் கலந்து கொண்டது எனக்கு பெருமை” என கூறினார்.

Similar News